ஏனையவை

அழகை பார்த்து மட்டும் காதலிக்கும் 4 ராசிக்காரர்கள்: உங்க ராசியும் இருக்கலாம் உஷாரா இருங்க..!

காதலுக்கு கண் இல்லை, சாதி, மதம், இனம் இல்லை என சொல்வார்கள். ஆனால் காதலுக்கு பணம் முக்கியம் என்று சொல்லும் பல பெண்களையும் பார்த்திருக்கிறோம், ஆண்களையும் பார்த்திருக்கிறோம். அதிலும் அழகைப் பார்த்து விரும்புபவர்களும் இருக்கிறார்கள். அதுபோல ஜோதிட சாஸ்த்திரத்தின் படி சில ராசிக்காரர்கள் பார்த்தவுடன் பிடித்துப் போன தோற்றத்தை மாத்திரம் பார்த்து விரும்புவார்கள். அப்படி அழகை மாத்திரம் விரும்பி காதலிக்கும் 4 ராசிக்காரர்கள் இவர்கள் தான்!

மேஷம் – அனைத்து ராசிகளை விடவும் அதிக ஆர்வமும், விடாமுயற்சியும் கொண்டவர்கள் தான் இந்த மேஷ ராசிக்காரர்கள். அவர்கள் ஆளுமைப் பண்புகளின் அடிப்படையில் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதில்லை, மாறாக கவர்ச்சிகரமான நபர்களுடன் பழகுவதை வைத்து தான் தனது வாழ்க்கைத் துணையை விரும்புகிறார்கள்.

கன்னி – இந்தக் கன்னி ராசிக்காரர்கள் அறிவார்ந்தவர்களிடம் அதிகம் ஈர்க்கப்படுகிறார்கள். அவர்கள் எப்போதும் தற்காலிகமான கவர்ச்சிகரமான நபர்களை விட புத்திசாலிகளை விரும்புகிறார்கள். இவர்கள் ஒருவருடன் நீண்ட காலம் பழக விரும்பினால் அவர்கள் எப்போதும் அழகானவர்களையே தேர்ந்தெடுக்கிறார்கள். எப்போதும் அழகான துணையுடன் சேர்ந்து நல்ல வாழ்க்கையை உருவாக்க விரும்புகிறார்கள்.

விருச்சிகம் – விருச்சிக ராசிக்காரர்கள் கனிவான இதயம் கொண்டவர்களைத் தான் விரும்புகிறார்கள். ஆனால் இவை அழகான உடலுக்குள் வேண்டுமென்று விரும்புகிறார்கள். இவர்கள் எப்போதும் அழகான உடலைத்தான் தேர்ந்தெடுப்பார்கள். அவர்கள் திருமணம் செய்ய விரும்பும்போது மிகவும் கவர்ச்சிகரமான தோற்றம் கொண்டவர்களையே விரும்புகிறார்கள்.

மகரம் – மகர ராசிக்காரர்கள் எப்போதும் தங்களைப் பற்றிய உயர்ந்த அபிப்பிராயத்தைக் கொண்டிருப்பார்கள். இந்த ராசிக்காரர்கள் கனிவான இதயத்தை அதிகம் மதிப்பார்கள். அதிலும் அழகான முகத்தை அதிகம் விரும்புவார்களாம் அதிலும், பணம், அந்தஸ்தை பெரிதாக நினைக்கமாட்டார்.

Back to top button