இலங்கை

நாளை நிகழ உள்ள முழு சந்திர கிரகணம் – வெளியான முக்கிய தகவல்

இந்த ஆண்டு முதல்முறையாக இந்தியாவில் நாளை முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளதாக நாசா தகவல் தெரிவித்துள்ளது.

நாளை நிகழ உள்ள சந்திர கிரகணம்

சந்திரனுக்கும் சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது அந்த நேரத்தில் சந்திரன் பூமியின் நிழலால் மூடப்படும். இதைத்தான் சந்திர கிரகணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் நாளை நிகழ உள்ளது. இந்த சந்திர கிரகணம் நாளை இரவு 8.45 மணிக்கு தொடங்கி அதிகாலை 1:02 மணிக்கு முடிவடைய உள்ளது.

இந்த சந்திர கிரகணம் ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, பசிபிக் அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல் மற்றும் ஆப்பிரிக்காவில் தெரியும். சந்திர கிரகணத்தை நீங்கள் நேரடியாக பார்க்கலாம் என்று நாசா தெரிவித்துள்ளது.இந்தியாவில் இந்த சந்திரகிரகணத்தை இரவு 10.52 மணிக்கு பார்க்கலாம். அப்போது, சந்திர கிரகணம் பார்ப்பதற்கு இருட்டாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.     

Back to top button