ஏனையவை

காலையில் கொள்ளு தோசை செய்து சாப்பிடுங்க

காலை உணவு என்பது உடலுக்கு எனர்ஜி தருவதாக இருக்க வேண்டும். இதனால் இட்லி, தோசை உணவுகளைச் சாப்பிடலாம். அத்துடன் காய்கறிகள், பழங்களையும் சாப்பிடலாம்.

அதிக சத்துக்கள் நிறைந்த உணவை காலையில் உண்பது மிகவும் நல்லது. எண்ணெய்யில் வறுத்த உணவுகளை நாம் காலையில் உண்ண கூடாது.

அந்த வகையில் காலை உணவாக சுவையான ஆரோக்கியமான கொள்ளு தோசை செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
பச்சரிசி – 1 கப்,
கொள்ளு – 1/2 கப்
உளுத்தம் பருப்பு – 1/4 கப்
வெந்தயம் – 1 தேக்கரண்டி
அவல் – 1/4 கப்,
உப்பு – 1 தேக்கரண்டி
தண்ணீர் – தேவையான அளவு
எண்ணெய் – 1 தேக்கரண்டி
நெய் – தேவையான அளவு

செய்யும் முறை
ஒரு பாத்திரத்தில் பச்சரிசி, கொள்ளு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் சேர்த்து நன்கு கழுவி 4 மணிநேரம் ஊற வைக்கவும். பின்னர் அவலை கழுவி 30 நிமிடம் ஊற வைக்கவும்.

பின்னர் அதை எல்லாம் எடுத்து தோசை மாவு பதத்திற்கு நன்றாக அரைத்து எடுக்கவும். இதனுடன் கொஞ்சம் உப்பு சேர்த்து எட்டு மணி நேரம் புளிக்க விடவும்.

எட்டு மணி நேரத்தின் பிறகு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதில் கொஞ்சம் எண்ணைய் ஊற்றி மா ஒரு கரண்டி எடுத்து தோசை வடிவத்திற்கு தேய்க்கவும்.

பின்னர் சுற்றிவர நெய் ஊற்றி பொன்நிறம் வந்ததும் திருப்பி போட்டு இறக்கினால் சுவையான கொள்ளு தோசை தயார். அதை நீங்கள் சட்டினி சாம்பாருடன் சாப்பிடலாம்.

Back to top button