ஏனையவை

இலகுவான முறையில் சட்டுனு இந்த கேக் செய்ங்க!

பொதுவாகவே அனைவருக்கும் மாலை நேரத்தில் எதாவது சாப்பிட வேண்டும் என்ற ஆசை அதிகமாவே இருக்கும். அதிலும் அதிகமானோர் மாலை நேரத்தில் அதிகமாக கேக் வாங்கி சாப்பிடுவார்கள். இந்த கேக் யாருக்கு தான் பிடிக்காது? வீட்டில் இருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது இது ஒன்றுக்கு மாத்திரமே.ஆகவே இதை இலகுவான முறையில் எப்படி விரைவாக செய்யலாம் என இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

தேவையானப் பொருட்கள் – மைதா – 150 கிராம், சர்க்கரை – 200 கிராம், நெய் – 100 கிராம், வெனிலா எசன்ஸ் – 2 drop

செய்முறை – முதலில் ஒரு பாத்திரத்தில் நெய்யை சூடாக்கி, மைதா சேர்த்து பச்சை வாசனை போக வறுத்தெடுக்கவும். பின் சர்க்கரையில் சிறிதளவு நீர் சேர்த்து கொதித்து பாகு தயாரிக்கவும். அடுத்து சர்க்கரை பாகையும் வறுத்தெடுத்த மாக்கலவையும் நன்றாக கிளறி எடுத்துக்கொள்ளவும். பின் வெனிலா எசன்ஸ் சேர்த்து, நெய் தடவிய தட்டுக்கு மாற்றி வேக வைத்து இறக்கினால் சுவையான கேக் ரெடி!

Back to top button