ஆன்மிகம்மாத ராசி பலன்

மார்ச் மாத ராசிபலன்; யாருக்கு சிறப்பாக இருக்கும்னு தெரியுமா?

இன்று பிறந்திருக்கும் மார்ச் மாதத்தின் 12 ராசியினருக்கும் காதல் ராசிபலன்களை இங்கு தெரிந்து கொள்வோம். பொதுவாக புதிதாக பிறக்கும் ஒவ்வொரு நாள் மற்றும் மாதம் மற்றும் வருடத்திற்கான ராசிபலன்களை தெரிந்து கொள்வதற்கு அந்தந்த ராசியினர் விரும்புவார்கள். கிரங்களின் நிலை மற்றும் பெயர்ச்சிகளால் ஒருவரது நிதிநிலை, தொழில் வாழ்க்கை, ஆரோக்கியம் இருக்கும் என்பதும் திருமண வாழ்க்கை மற்றும் காதல் வாழ்க்கையிலும் தாக்கம் ஏற்படும்.

வீட்டில் மீன்தொட்டியை இந்த திசையில் வைத்தால் பணத்திற்கு பஞ்சமே வராதாம்
வீட்டில் மீன்தொட்டியை இந்த திசையில் வைத்தால் பணத்திற்கு பஞ்சமே வராதாம்
காதல் கிரகமாக கருதப்படும் சுக்கிரன், மார்ச் மாதத்தின் தொடக்கத்திலேயே சனி பகவானின் ராசியான கும்ப ராசியில் நுழைந்து, சனி பகவானுடன் பயணிக்கவுள்ளார். ஆதலால் மேஷம் முதல் மீனம் ராசியினருக்கு காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் தாக்கம் ஏற்படும். ஆனாலும் சில ராசியினர் அதிக ரொமான்டிக்காகவும் இருப்பார்கள்.

மேஷம்
மேஷ ராசியினரில் திருமணம் ஆகாதவர்கள் இருந்தால் இந்த மாதத்தில் உங்கள் மனதைக் கவரும் வாழ்க்கை துணையை சந்திப்பீர்கள். காதலிப்பவர்கள் இந்த மாதத்தில் வாழ்க்கைத் துணையாக மாறுவார்கள். திருமணமான தம்பதிகளின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாகவே இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசியினர் தனது காதலிப்பவர்களுடன் நீண்ட பயணத்தை மேற்கொள்வதுடன், துணையுடன் அதிக நேரத்தை செலவழிப்பீர்கள். திருமண தம்பதிகளின் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

மிதுனம்
திருமணம் ஆகாத நபர்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்ட மற்றும் அழகான வாழ்க்கைத் துணையை சந்திப்பீர்கள். காதலிப்பவர்களுக்கும், திருமணமானவர்களுக்கும் இடையே பிணைப்பு அதிகமாகும்.

கடகம்
கடக ராசியினருக்கு இந்த மாதம் காதலிப்பவர்களுக்கு ஏற்றத் தாழ்வுகள் நிறைந்ததாக இருப்பதுடன், சில விடயங்களில் கோபம் ஏற்படவும், துணையிடமிருந்து விலகி இருக்கவும் செய்யலாம். திருமணமனவர்களிடையே புரிதல் அதிகமாகவும்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் காதலர்களாக இருந்தால் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். அதீத காதலுடன் இருக்கும் இந்த ஜோடிகள் வெளியிடங்களுக்கு செல்லும் வாய்ப்பு அதிகம். திருமணமானவர்களுக்கு உங்களது துணை நல்ல செய்திகளை கொடுப்பார்கள்.

கன்னி
கன்னி ராசியினரின் உறவுகளைப் பொறுத்தவரையில் சிறப்பாக இருக்காது. சிலரின் சதியால் உறவுகள் பிரிந்து செல்லும் சூழ்நிலை ஏற்படும். ஆதலால் திருமணமானவர்கள் எந்தவொரு பெரிய முடிவும் யோசிக்காமல் எடுக்க வேண்டும். அவசரத்தில் எடுக்கும் முடிவால் துணையை நிரந்தராக பிரியும் நிலை ஏற்படும்.

துலாம்
துலாம் ராசியினர் தங்களது துணையுடன் சேர்ந்து பெரிய முடிவுகளை எடுக்கலாம். முடிவுகள் சாதகமாகவே இருக்கும். தம்பதிகளுக்கிடையே அன்பும் அதிகமாகும்.

விருச்சிகம்
விருச்சிக ராசியினர் இந்த மாதத்தில் பல பிரச்சினைகளை சந்திக்கும் நிலை ஏற்படும். தேவையற்ற வாக்குவாதங்கள் அதிகரிக்கும் என்பதால், தனிப்பட்ட வாழ்க்கையும் பிரச்சினையாக நிறைந்திருக்கும். இம்மாதம் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்க விரும்பினால், துணையின் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். பிரச்சினையை பேசி சுலபமாக தீர்க்கவும்.

தனுசு
தனுஷ் ராசியினர் காதலர்களாக இருந்தால் இந்த மாதம் சிறப்பாகவே இருக்கும். ஒருதலை காதலாக இருந்தால் நல்ல செய்தி தேடி வரும். திருமணமானவர்களின் வாழ்க்கையும் மகிழ்ச்சியாகவே இருக்கும்.

மகரம்
மகர ராசியினருக்கு இந்த மாதம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருப்பதுடன், காதலுக்கு குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்து, பிரச்சினை நிறைந்திருக்கும். திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையை புரிந்து நடந்து கொண்டால் சிறப்பாக இருக்கும்.

கும்பம்
கும்ப ராசியினர் காதலர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இதனால் இருவருக்கும் இடையே இடைவெளி அதிகரிக்கும். ஆனால் மனம்விட்டு பேசினால் பிரச்சினை தீருமாம். பேசும் போது கட்டுப்பாட்டுடன் இருக்கவும்.

மீனம்
மீன ராசியினருக்கு இந்த மாதம் சிறப்பாக இருக்கும். ஒருதலை காதலர்களுக்கு நிச்சயம் நல்ல பதில் கிடைக்கும். தம்பதியினரிடையே ஒற்றுமை அதிகரிப்பதுடன், அதிக நேரத்தை செலவழிக்கவும் செய்வார்கள்.

Back to top button