ஆன்மிகம்

30 வருடங்களின் பின் கும்பத்தில் நுழையும் செவ்வாய்… அதிர்ஷ்டம் அடிக்கப்போவது இந்த ராசியினருக்கு தான்

கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றம் 12 ராசிகளிலும் தாக்கம் செலுத்தும். என ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படுகின்றது.

இவ்வாறு கிரகங்கள் தங்களின் இடத்தில் இருந்து இடம்பெயரும் போது அது குறிப்பிட்ட சில ராசியினருக்கு சாதகமான பலனையும் சில ராசியினருக்கு பாதக விளைவுகளையும் கொடுக்கும்.

அந்தவகையில் வகையில் நீதியின் கடவுளான சனிபகவானின் ராசியான கும்ப ராசியில் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி மாலையில் 6.22 இற்கு செவ்வாய் மகர ராசியில் இருந்து கும்பத்துக்கு இடம்பெயர்கின்றார்.

செவ்வாய் ஏப்ரல் 22ஆம் திகதி வரை கும்ப ராசியில் இருக்கப்போகின்றார்.அதனால் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் ராசியினர் யார் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசியினருக்கு இந்த காலப்பகுதியில் பண வரவு அமோகமாக இருக்கும். தொழிலில் நண்பர்கின் உதவிகள் கிடைக்ககூடியதாக அமையும்.

வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது. எதிர்பாராத நிதி லாபங்களை பெறக்கூடியதாக இருக்கும்.

சிம்மம்

இந்த கிரக மாற்றம் சிம்ம ராசியினருக்கு மிகவும் சாதகமான பலன்களை கொடுக்கும்.தொழில் வாழ்க்கை சிறப்பாக அமையும். பண வரவு போதியளவு இருக்கும்.

புதிய தொழில் ஆரம்பிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும்.தூர பயணம் செய்ய வேண்டிய தேவைகள் இந்த காலப்பகுதியில் அடிக்கடி ஏற்படும்.

கும்பம்

கும்ப ராசியினருக்கு இந்த கிரக மாற்றம் சாதகமாக அமையும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் காணபப்படும். எதிர்பாராத பண வரவுகளால் மகிழ்ச்சி கிடைக்கும்.

இந்த காலப்பகுதியில் நினைத்த காரியங்கள் அனைத்தும் சிறப்பாக அமையும். நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

Back to top button