ஆன்மிகம்

15 மாதங்களுக்கு பின் கும்பம் செல்லும் செவ்வாய் ; அதிர்ஷடத்தில் மூழ்கவுள்ள இராசிக்காரர்கள்

வேத ஜோதிடத்தில், நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய்.

இந்த செவ்வாய் தைரியம், வீரம், வலிமை ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். கிரகங்களில் செவ்வாய் 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்.

இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார். தற்போது செவ்வாய் மகர ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் மார்ச் மாதத்தில் செவ்வாய் கும்ப ராசிக்கு செல்லவுள்ளார். அதுவும் இந்த செவ்வாய் பெயர்ச்சியானது எதிர்வரும் (15.03.2024) ஆம் திகதி நிகழவுள்ளது.

முக்கியமாக இந்த கும்ப ராசியில் சனி பகவான் பயணித்து வருவதால், இந்த செவ்வாய் பெயர்ச்சிக்கு பின் சனி பகவானுடன் சேர்ந்து பயணிக்கவுள்ளார்.

இதனால் இந்த செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே சற்று அதிகமாக தெரியும்.

குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த பெயர்ச்சிக்கு பின் திடீர் பண வரவையும், முன்னேற்றத்தையும் காணவுள்ளார்கள்.

மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் எதிர்பாராத அளவில் உயர்வு ஏற்படும்.

நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும்.

நிதி நிலை வலுகூடையும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.

குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.

புதிதாக திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார்.

இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.

தொழிலதிபராக இருந்தால், விரும்பிய முன்னேற்றத்தைப் பெறுவார்கள்.

பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.

நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தால், இந்த பெயர்ச்சிக்கு பின் நல்ல வேலையைப் பெற வாய்ப்புள்ளது.

கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டிற்கு செவ்வாய் செல்லவுள்ளார்.

இதனால் இந்த ராசிக்காரர்களின் நம்பிக்கை இக்காலத்தில் அதிகரிக்கும்.

ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முக்கியமாக நல்ல நிதி ஆதாயத்தைப் பெற வாய்ப்புள்ளது.

திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவார்கள்.

திருமணமாகாதவர்கள் எதிர்பார்த்த வாழ்க்கைத் துணையை இக்காலத்தில் சந்திப்பார்கள்.

Back to top button