செவ்வாழை தரும் அற்புதமான பலன்கள் ஏராளம்
மா, பலா, வாழை என்ற முக்கனிகளில் கடைசி பழமாக இருந்தாலும் உலக மக்களால் தினம் விரும்பி சாப்பிடப்படும் முதல் பழம் வாழைப்பழமே. வாழைப்பழங்களில் செவ்வாழை சிறப்பு வாய்ந்தது ஆகும். இதன் தாயகம் தென்மேற்கு ஆசியா எனக் கருதப்படுகிறது. தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இது அதிகம் விளைகிறது.
செவ்வாழை மரங்கள் மற்ற வாழைமரங்களை விட தண்டு பகுதியில் சற்று சிவந்து காணப்படும். பொதுவாக வாழை மரங்கள் செம்மண் பகுதியில் செழித்து வளருகின்றன. ஒவ்வொரு தாவரத்துக்கும் தனித்துவமான தாவர வேதிப்பொருள்கள் இருக்கும். அந்த அடிப்படையில் உடம்பை வலுவாக்கும் காயகல்பமாக மருத்துவத்தில் செவ்வாழைப் பழம் பயன்படுத்தப்படுகிறது.
செவ்வாழையின் நற்பயன்கள்
மற்ற வாழைப்பழங்களை விட இந்த செவ்வாழையில் குறைந்த அளவே Calorie கள் உள்ளதனால் இது உடல் எடை குறைப்பிற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.
தொடர்ந்து 48 நாட்களுக்கு செவ்வாழைப்பழத்தை சாப்பிட்டு வருவதினால் நரம்பு தளர்ச்சி மற்றும் ஆண்மை குறைபாடு போன்ற பிரச்சனைகளில் இருந்து விடிவுபெற முடியும்.
செவ்வாழை பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் குறைந்த Glycemic குறியீடு போன்றவையானது சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்ததாக இருக்கக்கூடும் என்பதால் அவர்கள் அதை உட்கொண்டு வரலாம்.
பொட்டாசியமானது இந்த செவ்வாழையில் அதிகளவில் உள்ளமையால் இது சிறுநீரக கற்களை உருவாகாமல் தடுப்பது, இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்றவற்றிலிருந்து தீர்வளிக்கக்கூடும்.
தொடர்ந்து 21 நாட்களுக்கு செவ்வாழை சாப்பிட்டு வந்தால் பல் தொடர்புடைய எந்த ஒரு பிரச்சனையும் தீரக்கூடும்.
செவ்வாழை சாப்பிட்டு வருவது அல்லது இதன் சிறிய துண்டை எடுத்து கண்களின் மேல் சிறிது நேரம் வைத்தால், கண் எரிச்சலும், கண்ணில் நீர் வழிதழும் உடனே நின்றுவிடும்.
செவ்வாழையில் இருக்கும் இயற்கை சர்க்கரையானது உடலுக்கு ஆற்றலை வழங்குவது மட்டுமின்றி எப்போதும் சுறுசுறுப்பாகவும், உற்சாகத்தோடும் வைத்துக்கொள்கிறது.
சரும பிரச்சனைகளான சொரி, சிரங்கு, தோல் வெடிப்பு போன்றவற்றில் இருந்து விடுவுபெற தொடர்ந்து 7 நாட்கள் செவ்வாழையை உட்கொள்ளவேண்டும்.
மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண்பார்வையானது குறைய தொடங்கியதும் செவ்வாழை பழத்தை சாப்பிட்டு வந்தால் பார்வை தெளிவடையக்கூடும்.
இதில் இயற்கையாக Anti-oxidants இருப்பதால் நெஞ்செரிச்சலை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.