உடல்நலம்

மருத்துவ குணங்கள் நிறைந்த சுக்கு களி: செய்வது எப்படி?

பொதுவாக சுக்கில் ஆன்டி ஆக்சிடண்ட்டுகள், ஆன்டி இன்பிளமேட்டரி மற்றும் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் அடங்கியிருக்கின்றன.

சுக்கு நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.சளி இருமல் என்றால் சுக்கு களி செய்து சாப்பிட்டால் சளி இருமல் குணமாகும்.

குழந்தைகளின் எலும்புகள் வலும்பெற இந்த சுக்கு களி பெரிதும் உதவுகிறது.மேலும் பிரசமான பெண்களுக்கு கர்பப்பை வலுவாக மாற இந்த களியே செய்து தரலாம்.
தேவையான பொருட்கள்

அரிசி- 1 கப்
சுக்கு -ஒரு பெரிய துண்டு
ஏலக்காய் – 1
நல்லெண்ணெய்- 100 கிராம்
கருப்பட்டி வெல்லம் – 100 கிராம்

செய்முறை

அரிசியை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.சுக்கு மற்றும் வெல்லத்தை நன்றாக ஈது வைத்து கொள்ளவும்.

பின் சுக்கு, ஏலக்காய், அரிசி அனைத்தும் மிக்ஸியில் நன்றாக அரைத்து கொள்ளாவும்.

வாணலியில் எண்ணைய் ஊற்றி ஆட்டிய மாவைக் கொட்டி கைவிடாமல் நன்கு கிளறவும்.

வெந்து கொண்டிருக்கும் போது வெல்லத்தை சேர்த்து கிளறி நன்கு உருண்டையாக திரண்டு வரும் சமயம் அடுப்பை அணைத்து பரிமாறவும்.

அப்படியே சுடச் சுட சாப்பிட இருமல், நெஞ்சு சளி தீரும். மேலும் பிரசவம் ஆன சமயத்தில் இதை தாய்க்குக் கொடுப்பார்கள்.

Back to top button