ஆண்களே… விந்தணு உற்பத்தியை அதிகரிக்க இந்த உணவுகள் சாப்பிடுங்கள்
குழந்தையின்மைக்கு பெண்கள் மட்டும் காரணம் கிடையாது. இதில் சில ஆண்களும் காரணம்தான். ஆண்களுக்கு குறைபாடுகள் இருந்தால் குழந்தைப் பேறு உண்டாகுவதில் சிக்கல்கள் ஏற்படும். ஆண்களுக்கு ஏதாவது பிரச்சினை இருந்தால், இந்த சமுதாயம் அவர்களின் ஆண்மையை குறைகூறி கிண்டலும், கேலியும் செய்வதுண்டு. இதனால் சில ஆண்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். ஆனால், எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், அதற்கான தீர்வுகள் உண்டு. அந்த அளவிற்கு இக்கால நவீன மருத்துவம் மாறிவிட்டது. கவலை வேண்டாம். ஆண்மையை பெருக்க, விந்தணுவை அதிகரிக்க கீழ்க்காணும் சில இயற்கையான உணவுகளை உட்கொண்டு வந்தால் நீங்கள் இப்பிரச்சினையிலிருந்து விடுபட்டு விடலாம். ஆண்களின் விந்தணுவை அதிகரிக்கும் உணவுகளைப் பற்றி பார்ப்போம் –
மாதுளை ஜூஸ் தினமும் மாதுளை ஜூஸ் எடுத்துக் கொண்டால் , விந்துவின் சக்தி அதிகரிக்கும். மாதுளைபழத்தில் உள்ள ஆன்டி-ஆக்சிடென்ட்டுக்கள் ரத்த ஓட்டத்தை சீராக்கும். அணுக்களை அதிகரிக்க தூண்டும்.
முருங்கை கீரை முருங்கை கீரை மற்றும் முருங்கை பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டு சாப்பிட்டால் விந்தணு அதிகரிக்கும். முருங்கை கீரை மற்றும் பூவை பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கும்.
அத்திப்பழம் அத்திப்பழத்தை 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி பெறலாம்.
பேரிச்சம்பழம் தினமும் பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால், விந்தணுக்களின் எண்ணிக்கை அதிரிக்க முடியும். பேரீச்சம்பழத்தில் உள்ள எஸ்ட்ராடியோல் ஆண்களின் இந்தக் குறைப்பாட்டிலிருந்து குணப்படுத்தும்.
உலர் திராட்சை தினமும் உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால், ஆண்மை சக்தி பெருகும். திராட்சையில் உள்ள வைட்டமின் ஏ சத்து ஆண்களின் அனைத்து விதமான பிரச்சினைகளை போக்கும்.
மேலே சொன்ன பழங்களை சாப்பிட்டு, மன அழுத்தம் இல்லாமல், மிதமான உடற்பயிற்சி செய்து வந்தால் நிச்சயம் உங்களுக்கு குழந்தைப் பேறு கிட்டும்.