இலங்கை
இலங்கையில் மேலும் குறையும் பால்மா விலை!
பால்மாவின் விலையை எதிர்காலத்தில் மேலும் குறைப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நாட்டிலுள்ள பிரதான பால் மா இறக்குமதி நிறுவனங்கள் இதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் நேற்றைய தினம் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது இந்த இணக்கம் வெளிப்படுத்தப்பட்டதாக நளின் பெர்னாண்டோ முகநூலில் பதிவிட்டுள்ளார். அத்துடன் இது தொடர்பான அறிக்கை விரைவில் வர்த்தக அமைச்சிற்கு அனுப்பப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.