பயங்கரவாதி சஹ்ரானின் வாகனத்தில் சிங்கள எம்.பி: புத்தராக மாறும் சரத் வீரசேகர

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை நடத்திய சஹ்ரான் ஹாசிமின் காரை தான் பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேஹர தெரிவித்துள்ளார்.
இந்த கார் விசேட பொலிஸ் பிரிவின் கார் பிரிவில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சனல் 4 ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, சரத் வீரசேகர சஹ்ரான் ஹசீமின் காரை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்ற ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சனல் 4 விவகாரம்
நான் இவ்வாறான ஒரு வாகனத்தையும் பயன்படுத்தவில்லை. வழக்குப்பொருளாக இருக்கும் வாகனத்தை நான் எவ்வாறு பயன்படுத்த முடியும்?தேவைப்பட்டால், பொலிஸ் மா அதிபரிடம் கேட்டுப் பாருங்கள்.
சனல் 4 வழக்கு போலியானது என நிரூபிக்கும் தருணத்தில் இவ்வாறான பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவதூறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இதை நான் முற்றிலுமாக நிராகரிக்கின்றேன்.
இன வன்முறை
நான் நாட்டிற்காக தியாகம் செய்து நல்ல நிலைக்கு வருகின்ற போது இப்படியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தால் அவற்றை கண்டுகொள்ள முடியாது. புத்தருக்கே குற்றம் சுமத்தப்பட்டது. “நான் இவற்றினை கண்டுக்கொள்ள மாட்டேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சரத் வீரசேகர அண்மைக்காலமாக தமிழர்களை துன்புறுத்தி இனவாத வன்முறையை தூண்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.