இலங்கை

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பாம்பு தீண்டிய விவகாரம்: வெளிவரும் உண்மைகள்

முல்லைத்தீவு – பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் திருட முற்பட்டவர்கள் பாம்புத் தீண்டலுக்கு இலக்கானதாக கூறப்படும் சம்பவம், உண்மைக்கு புறம்பானது என ஆலயத்தின் நிர்வாக செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.ஆலயத்தில் உள்ள சிசிரீவி கருவியை சரிபார்க்க சென்ற நிர்வாக குழு உறுப்பினரையே பாம்பு தீண்டியதாகவும், சில ஊடகங்கள் உண்மைக்கு புறம்பான செய்தியினை வெளியிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவிக்கையில், உதவி முகாமையாளரிடம் சிசிரீவி கருவியை இயக்குவதற்கான சுட்டியை எடுத்துக் கொடுங்கள் என்று நான் கூறினேன். சுட்டி தொழில்படாத காரணத்தினால் பிரதான பெட்டியை திறக்க வேண்டி ஏற்பட்டது. அதனுள் இருந்தே பாம்பு எமது உறுப்பினரை தீண்டியது. இதன்காரணமாக பாம்பு தீண்டியவரையும், பாம்பையும் உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லவேண்டிய தேவை ஏற்பட்டது.” என்றார்.

Back to top button