இலங்கை

கொழும்பில் குழப்பத்திற்கு மத்தியிலும் நினைவுச்சுடர் ஏற்றப்பட்டது

கொழும்பு – பொரளையில் ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை சீர்குலைக்க ஒரு குழுவினர் முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவுக்கூறுவதை அனுமதிக்க முடியாது என தெரிவித்தும் இந்நிகழ்விற்கு எதிராக பல்வேறு எதிர்ப்பு கோசங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பிட்ட தரப்பினரின் எதிர்ப்பு மத்தியிலும் முள்ளிவாய்க்காலில் உயிர் இழந்தவர்களை நினைவு கூறும் சுடரானது கொழும்பில் ஏற்றப்பட்டுள்ளது. அத்துடன் சம்பவம் தொடர்பில் அறிந்து அப்பகுதிக்கு வந்த பொலிஸார் நிலைமைகளை சுமுகமாக்கியுள்ளதாகவும் அறியப்படுகிறது.

Back to top button