இலங்கை
யாழ் இந்துவில் வைக்கப்பட்ட காண்போரை நெகிழ்ச்சிக்குள்ளாக்கிய முள்ளிவாய்க்கால் பதாகை!

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்ததில் கொல்லப்பட்ட உறவுகளுக்கான 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழர் தாயகப்பகுதிகளில் மட்டுமல்லாது புலம் பெயர் தேசங்களிலும் நினைவேந்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் யாழ்.இந்துக் கல்லூரியில் முள்ளிவாய்க்கால் படுகொலையை நினைவுகூர்ந்து பதாகை ஒன்று வாயிலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அப்பதாகையில் “தாலாட்டு கேட்டு வளர்ந்தவர்கள் அல்ல நாம், எம் தாயாரின் மரண ஓலங்களை கேட்டு வளர்ந்தவர்கள் நாம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்த பதாகை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
