உடல்நலம்

பேன் தொல்லை நிரந்தரமாக நீங்க இயற்கை ஷாம்பு: வீட்டிலேயே தயாரிக்கலாம்

வீட்டில் பள்ளி செல்லும் குழந்தை மற்றும் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்கும் தலையில் பேன் மற்றும் ஈறு தொல்லை இருந்துகொண்டே இருக்கும். வாராவாரம் தலைக்கு எண்ணெய் வைத்து சீப்பால் வாரி எடுத்தாலும், பேன் குறைந்தபாடிருக்காது. மெடிக்கலில் விற்கப்படும் பேன் மருந்தை வாங்கி பயன்படுத்தினாலும் அதனால் பக்கவிளைவுகள் ஏதும் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. எனவே பேன் மற்றும் ஈறு தொல்லைகளை இயற்கை முறையில் நிரந்தரமாக விரட்ட இந்த ஒரே ஒரு இயற்கைமுறையில் தயாரிக்கும் ஷாம்பு போதும்.

தேவையான பொருட்கள் – பூந்திக்கொட்டை- 100 கிராம் சீகைக்காய்- 20 கிராம் உலர வைத்த நெல்லிக்காய்- 20 கிராம் தண்ணீர்- 2 கப்

செய்முறை முதலில், பூந்திக்கொட்டை மற்றும் சீகைக்காயில் இருந்து விதைகளை அகற்றவும். பின் ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி நெல்லிக்காய், பூந்திக்கொட்டை மற்றும் சீகைக்காய் ஆகியவற்றை சேர்த்து, நன்கு கொதிக்க வைக்கவும்.அதை ஆற விடவும். பூந்திக்கொட்டையின் அனைத்து கூழ்களையும் பிழிந்து கொள்ளவும். ஒரு வடிகட்டியைப் பயன்படுத்தி, ஷாம்பூவை வடிகட்டி பாட்டிலில் சேமிக்கவும். இதை பயன்படுத்துவதற்கு முன் முடிக்கு எண்ணெய் தடவ பரிந்துரைக்கப்படுகிறது.

கிடைக்கும் நன்மைகள் – முடியை பளபளப்பாகவும், பொலிவாகவும் ஆக்குகிறது. முடி நரைப்பதைக் கட்டுப்படுத்த உதவுகிறது. சிறந்த முடி வளர்ச்சியைத் தூண்டுகிறது. பொடுகை போக்குகிறது. உச்சந்தலையில் உள்ள பேன்களை அழிக்க உதவுகிறது.

Back to top button