உடல்நலம்

மலச்சிக்கல் பிரச்சனைக்கு உடனடி தீர்வு வேண்டுமா? அப்போ அவகோடா இருந்தா போதும்

பொதுவில் எமது தினசரி உணவில் போதுமான நார்ச்சத்து இருக்க வேண்டியது செரிமான அமைப்பின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம்.ஏனெனில் இது ஆரோக்கியமான பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது. போதுமான அளவு நார்ச்சத்து உடலுக்கு கிடைக்காத பட்சத்தில் செரிமானப் பிரச்சினை மற்றும் மலச்சிக்கல் போன்ற நிலைமை உருவாகும். இதற்கு இலகுவில் தீர்வு கொடுக்கும் அவகோடா குறித்து இந்த பதிவில் பார்கக்லாம்.

அவகோடாவின் நன்மைகள்

இதற்கு அவகோடா மிகச்சிறந்த தீர்வு கொடுக்கின்றது. அவகோடாவில் நார்ச்சத்து அதிகம் காணப்படுகின்றது. ஒவ்வொரு அவகோடாவிலும் சுமார் 14 கிராம் நார்ச்சத்து காணப்படுகின்றது.

அவகோடாவில் அதிகளவு ஃபேகலிபாக்டீரியம், லாக்னோஸ்பிரா மற்றும் அலிஸ்டிப்ஸ் போன்ற பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன, இவை அனைத்தும் ப்யூட்ரேட் உட்பட குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலங்களை (SCFAs) உருவாக்குகின்றன.

SFCAகள் பெருங்குடல் செல்களை எரியூட்ட இந்த கொழுப்பு அமிலங்கள் பயன்படுகின்றன மற்றும் பெருங்குடல் புற்றுநோய் மற்றும் அழற்சி குடல் நோய் போன்ற நோய்களுக்கு எதிராக செயற்படுகின்றன.

இதனை தினசரி உணவில் சேர்த்து கொள்வதனால் இதய நோய் அபாயம் குறைவடைகின்றது. அவகோடாவில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து ஆகியவை இதய அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.

அவகோடா இதயத்தைப் பாதுகாக்கும் HDL கொழுப்பை அதிகரிக்கவும் மற்றும் ஆக்ஸிஜனேற்றப்பட்ட LDL கொழுப்பின் அளவைக் குறைக்கவும் உதவுகின்றது. இதனால் இதயம் சம்பந்தமான நோய் அபாயங்களை குறைக்க முடியும்.

இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. அவகோடாவில் அதிக கலோரிகள் இருந்தாலும், அவை ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன.

ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினசரி உணவில் அவகோடாவை சேர்த்துக்கொள்வது சிறந்த பலனை கொடுக்கும்.

Back to top button