வீட்டில் இந்த தவறுகளை ஒருபோதும் செய்யாதீங்க… செல்வம் தங்காதாம்
நமது வீடுகளில் சில தருணங்களில் நாம் செய்யும் தவறுகள் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். அதிலும் வாஸ்து பிரச்சினை, தெய்வ குற்றம் என்று அடுத்தடுத்து ஏற்படுமாம். நாம் தினமும் செய்யும் சிறு சிறு தவறுகளைக் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
தினமும் செய்யும் தவறுகள்
நாம் உடுத்திய பழைய துணிகளை வீட்டின் கதவுகளின் மீது போடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
உடம்பிலிருந்து உதிர்ந்த முடியையும், நகத்தையும் வீட்டில் வைக்காமல் வெளியே குப்பையில் போட்டு விட வேண்டும்.
இரண்டு கைகளாலும் ஒரே சமயத்தில் நம் தலையைச் சொறிதல் கூடாது.
கோவிலுக்கு மற்றும் சுபமங்கள நிகழ்ச்சிக்கு சென்று வந்தவுடன் குளிப்பது தவறான செயலாகும்.
இதே போன்று சாப்பிடும் போது உணவை உருண்டையாக உருட்டி சாப்பிடுவது கூடாது.
ஈரத்துணியுடன் அமர்ந்து உணவு சாப்பிடக்கூடாது.
சவரம் (ஷேவிங்) செய்து கொள்ளும் முன்பு எதுவும் சாப்பிடுவது கூடாது.