இலங்கை

சந்தையில் முட்டை விலை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

இலங்கையில் சந்தையில் முட்டை விலை மேலும் குறைவடையுமென அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் அனுர மாரசிங்க தெரிவித்துள்ளார். முட்டைக்கான கேள்வி குறைவடைந்துள்ளமையினால் தற்போது உற்பத்தி செய்யப்பட்டுள்ள அதிகளவான முட்டைகள் சந்தைக்கு விநியோகிக்கப்படாமல் பண்ணைகளில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் உயர்வடைந்திருந்த முட்டையின் விலை தற்போது நாட்டின் பல பகுதிகளில் 50 முதல் 52 ரூபா வரையில் குறைவடைந்துள்ளது.எனவே எதிர்வரும் காலங்களில் முட்டையின் விலை 30 முதல் 40 ரூபா வரையில் மேலும் குறையவுள்ள சாத்தியம் நிலவுவதாக அகில இலங்கை முட்டை வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் கூறியுள்ளார்.

Back to top button