இலங்கை
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை பெறுபேறுகள் இன்னும் ஒரு வாரத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்பரீட்சை கடந்த மே 29 ஆம் திகதி ஆரம்பமாகி ஜூன் 08 ஆம் திகதி வரை நடைபெற்றது. இதனிடையே, இம்மாத இறுதியில் முடிவுகள் வெளியாகும் என சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகள் முற்றிலும் தவறானவை எனவும் விளக்கமளித்துள்ளார். மேலும், இந்த வருடத்திற்கான பரீட்சை பெறுபேறுகள் 45 நாட்களுக்குள் வெளியிடப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதேவேளை, நடைமுறை ரீதியாக நிலவுகின்ற சிரமங்களால் பரீட்சை முடிவுகள் வெளியாவது இன்னும் தாமதிக்கலாம் என்று கல்வி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.