இலங்கை

கடவுச்சீட்டு வழங்கலில் புதிய நடைமுறை!

இலத்திரனியல் கடவுச்சீட்டை அடுத்த வருடம் முதல் அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, இ- கடவுச்சீட்டை அறிமுகம் செய்வதற்கான கொள்முதல் நடவடிக்கையை ஏற்கனவே தொடங்கியுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.

பல நாடுகள் இந்த திட்டத்திற்கு தங்களின் உதவியை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை, எதிர்வரும் ஜூன் மாதம் முதல் புதிய முறைமையின் கீழ் கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் ஒன்லைனில் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிவித்துள்ளது. இந்நிலையில் ஆவணங்களை சமர்ப்பித்ததன் பின்னர், மூன்று நாட்களுக்குள் கடவுச்சீட்டுகளை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

மேலும், கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்கள் கைரேகைகளை வழங்கக்கூடிய 50 பிரதேச செயலகங்களை தாங்கள் ஏற்கனவே அடையாளம் கண்டுள்ளதாக கட்டுப்பாட்டாளர் நாயகம் குறிப்பிட்டார். இதன்போது கைரேகை இயந்திரங்கள் ஏற்கனவே சரி செய்யப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகளுக்கு தேவையான பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது என்றார். விண்ணப்பதாரர்கள் இணையம் மூலமாகவோ அல்லது இலங்கை வங்கியின் எந்தவொரு கிளையினூடாகவோ தேவையான கொடுப்பனவுகளைச் செய்ய முடியும். மேலும் புதிய அமைப்பு ஜூன் 1 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது .

Back to top button