பிரான்ஸ் நிர்வாகம் கலவர பீதியால் விதித்த புதிய தடைகள்!

பிரான்சில் Bastille Day விடுமுறையை முன்னிட்டு பொதுவெளியில் வானவேடிக்கை நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜூலை 14ம் திகதி பிரான்சில் Bastille Day கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், கடந்த மாதம் பொலிஸ் வன்முறைக்கு இளைஞர் ஒருவர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட அசம்பாவித சம்பவங்கள் தொடரலாம் என பிரான்ஸ் நிர்வாகம் அஞ்சுகிறது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அரசாணையில், பட்டாசுகள் விற்பனை செய்வதும், காட்சிப்படுத்துவதும், வாகனத்தில் எடுத்துச் செல்வதும், பயன்படுத்துவதும் ஜூலை 15ம் திகதிக்கு பின்னரும் தடை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். தொடர்புடைய நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிப்பதால், புதிதாக வன்முறைக்கு வாய்ப்பளிப்பதாக இருக்கும் என பிரான்ஸ் நிர்வாகம் அஞ்சுகிறது. ஆப்பிரிக்க வம்சாவளி இளைஞர் 17 வயது நஹெல் என்பவர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், ஏற்பட்ட வன்முறை சம்பவங்களில் பரவலாக பட்டாசுகளும், கற்களும், போத்தல்கலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், 6 நாட்கள் தொடர்ந்து நீடித்த வன்முறை சம்பவங்களால், பிரான்ஸ் முழுவதும் பற்றியெரிந்தது. பாரிஸ் புறநகர் பகுதியில் ஜூன் 27ம் திகதி நடந்த அந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நடந்த கலவரத்தில், வன்முறையாளர்கள் பரவலாக பட்டாசுகளையே பயன்படுத்தியுள்ளனர்.குறைந்த விலை, எளிதாக கிடைக்கும் பொருள் என்பதாலும், சில நிமிடங்களிலேயே விநியோகம் செய்யப்படுவதாலும் வன்முறையாளர்கள் பட்டாசுகளை தங்கள் ஆயுதமாக பயன்படுத்தினர். இந்த நிலையில் தான், ஜூலை 14 விடுமுறை நாளில் பட்டாசுகளுக்கு தடை விதித்து பிரதமர் Élisabeth Borne அரசாணை வெளியிட்டுள்ளார்.