லண்டன்

பிரித்தானியாவின் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புலம்பெயரவுள்ளவர்களுக்கான புதிய விதிகள்! அச்சத்தில் மக்கள்

பிரித்தானியாவிற்குப் புலம்பெயரவுள்ளவர்களுக்காக புதிய புலம்பெயர்தல் விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பிரித்தானிய உள்துறைச் செயலர் தெரிவித்துள்ளார். இந்த விதிகள் பலருக்கு அச்சத்தையும் சந்தேகத்தையும் உருவாக்குவதாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரித்தானியா அறிமுகம் செய்யவுள்ள புதிய புலம்பெயர்தல் விதிகளில் ஒன்றாக, ஆண்டொன்றிற்கு 38,700 பவுண்டுகள் வருமானமாகப் பெறுபவர்கள் மாத்திரமே, பிரித்தானியர்கள் அல்லாத தங்கள் குடும்பத்தினரை (கணவன் அல்லது மனைவி மற்றும் பிள்ளைகள்) தங்களுடன் பிரித்தானியாவில் வைத்துக்கொள்ளமுடியும் எனக் கூறுகிறது.

குறித்த செய்தி பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் குறிப்பிடப்பட்ட வருமானத்தை விட குறைந்த வருமானத்தைப் பெறுபவர்களுக்கு பிரித்தானியரல்லாத தங்கள் குடும்பத்தினரை அவர்களுடைய நாட்டுக்கு திருப்பி அனுப்பிவிடவேண்டுமா என்னும் கேள்வியும் எழுந்துள்ளது. இதுகுறித்துப் பதிலளித்த உள்த்துறைச் செயலர் ஜேம்ஸ் கிளெவர்லி, இந்த விதியானது இனிமேல் பிரித்தானியாவிற்கு புலம்பெயரவுள்ளவர்களுக்கே பொருந்தும் எனவும் ஏற்கனவே பிரித்தானியாவில் வாழ்பவர்களை இந்த விதி பாதிக்காது எனவும் அவர் கூறியிருந்தார். அதாவது, ஏற்கனவே பிரித்தானியாவில் வாழும் 38,700 பவுண்டுகளுக்கு குறைவான வருமானத்தைப் பெறுபவர்கள் தங்கள் குடும்பத்தினரை அவர்களுடைய நாட்டுக்கே திருப்பி அனுப்பும் நிலை ஏற்படாது என்று ஜேம்ஸ் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button