ஏனையவை

மின்சாரமில்லா களிமண் குளிர்சாதன பெட்டி விற்பனைக்கு! அலைமோதும் மக்கள்

களிமண்ணினால் செய்யப்பட்ட மின்சாரமின்றி இயங்கும் குளிர்சாதனப் பெட்டியை வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதி வருகின்றது. கோவையிலே களிமண்ணால் செய்யப்பட்ட இந்த மின்சாரம் இல்லாத குளிர்சாதனப் பெட்டியை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த 2016 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தை சேர்ந்த மன்சுக்பாய் பிரஜபதி என்பவரே இந்த களிமண்ணாலான குளிர்சாதன பெட்டியை கண்டுபிடித்துள்ளார்.இது இந்தியாவில் முதலாவது களிமண்ணாலான குளிர்சாதனப்பெட்டி என்ற பெருமையினை பெறுகின்றது.

மேலும், மிட்டி கூல் என்று அழைக்கப்படுவதுடன், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளிலுள்ள கிராமப்புற சமூகங்களுக்கு குறைந்த விலையில் குளிரூட்டும் கருவியாக செயற்படுகின்றது. இது நீரின் ஆவியாதல் மூலம் மட்டுமே குளிர்விக்கப்படுவதுடன், களிமண் குளிர்சாதனப் பெட்டியின் மேல் அறை, குளிர்சாதனப் பெட்டியின் பக்கவாட்டில் மெதுவாகச் சொட்டி ஆவியாகி நீரை சேமிக்கப் பயன்படுகின்றது. தண்ணீரை மட்டுமே பயன்படுத்தி, உணவு, காய்கறிகள் மற்றும் பால் போன்றவற்றை இயற்கையாகவே பல நாட்கள் வரை வைத்திருக்க முடியும் என்றும் மரக்கறிகள் 7 நாட்கள் வரை பழுதாகாமல் இருக்கும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், இது வெள்ளை களிமண்ணால் செய்யப்பட்டுள்ளதால் பராமரிப்பு இலகுவானதாகவும், மின்சாரம் பற்றாக்குறை மற்றும் அடிக்கடி மின்தடை ஏற்படும் பகுதிகளில் பயன்படுத்துவதற்கு உகந்தது என கூறப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாகவும் , விலை அதிகமாக இருப்பதால் மக்கள் வாங்க யோசித்து வருகிறார்கள். ஆனாலும் தமிழ்நாடு, கேரளா மாநிலத்தில் தொடர்ந்து ஆடர்கள் வந்து கொண்டு இருப்பதாக தெரிவித்துள்ளனர். தற்பொழுது ஒன்று 8 ஆயிரத்து 500 லிருந்து விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் , உற்பத்தி அதிகரிக்கும் பட்சத்தில் விலை குறைய வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

Back to top button