இலங்கை

வடக்கு, கிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள வடக்கு, கிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் சின்னங்கள், நில ஆக்கிரமிப்பு, மரபுரிமைகள் அழிப்பு, பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நிறைவேற்ற மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு எதிராக இந்த போராட்டம் இடம்பெறவுள்ளது. இதற்கமைய எதிர்வரும் 25ஆம் திகதி வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் முழுமையான கதவடைப்பு போராட்டத்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் எதிர்வரும் 25ஆம் திகதி பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் அன்றைய நாளில் நாடாளுமன்றத்திற்குள்ளும் போராட்டம் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Back to top button