தாய்பால் சுரக்கவில்லையா? கவலை வேண்டாம்… இந்த உணவுகளை சாப்பிட்டாலே போதும்
ஒரு குழந்தை பிறந்தால் கண்டிப்பாக 6 மாதமாவது தாய்ப்பால் கொடுக்க வேண்டியது அவசியம். ஏனென்றால், தாய்ப்பாலில் அனைத்துவிதமான ஊட்டச்சத்துக்கள் உள்ளது. குழந்தைக்கு 1 வயது ஆனபோது மருத்துவரின் ஆலோசனைப்படி தாய்ப்பாலை நிறுத்த வேண்டும். ஆனால் சில பெண்கள் தாய்ப்பால் கொடுத்தால் தங்களது அழகு போய்விடும் என்று நினைத்து குழந்தைகளுக்கு தாய்ப்பாலை கொடுக்காமல் உடனே நிறுத்திவிடுவார்கள். அது முற்றிலும் தவறான விஷயம். தாய்ப்பால் கொடுத்தால் குழந்தைக்கு மட்டுமல்ல, தாய்க்கும் ஆரோக்கியம்தான். தாய்ப்பால் கொடுத்தால் பெண்களுக்கு மார்பக புற்றுநோயிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். ஆனால், குழந்தை பிறந்த பிறகு சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்காது. இதனால், தாய்மார்கள் வேதனைப்படுவார்கள். கவலை வேண்டாம். மிகவும் சத்துவாய்ந்த தாய்ப்பால் இயற்கையாக சுரக்க என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்று பார்ப்போம் –
வெந்தயம் வெந்தயத்தை ஊறவைத்து பாலில் காய்ச்சி சிறிது சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் நன்கு தாய்ப்பால் சுரக்கும். சாதம் வடித்த கஞ்சியிலும், வெந்தயத்தூளை சேர்த்து காய்ச்சி குடித்து வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
பேரிச்சம் பழம் பேரிச்சம் பழத்தில் அதிகளவு ஊட்டச்சத்து நிறைந்து காணப்படுகிறது. அதில் வைட்டமின் ஏ, ஆன்டி ஆக்ஸிடென்ட், பொட்டாசியம் போன்றவை நிறைந்து காணப்படுகின்றன. தினமும் பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும். குழந்தைப் பிறப்பதற்கு முன், பின் பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் நன்கு சுரக்கும்.
வெற்றிலை தாய்ப்பால் நன்கு சுரக்க வேண்டும் என்றால், வெற்றிலைகளை நெருப்பில் காட்டி மார்பகங்களில் வைத்துக் கட்டினால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும்.
பாகற்காய் தாய்ப்பால் நன்கு சுரக்க வேண்டும் என்றால், பாகற்காயின் இலையை அரைத்து மார்பகங்களில் பற்றுப் போட வேண்டும். இப்படி செய்தால் தாய்ப்பால் சுரக்கும்.
ஆலம் விழுது தாய்ப்பால் நன்கு சுரக்க வேண்டும் என்றால், ஆலம் விதை பாலில் காய்ச்சி குடித்து வந்தால் பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்கும்.
அருகம்புல் சாறு தாய்ப்பால் நன்கு சுரக்க வேண்டும் என்றால், அருகம்புல் சாறுடன் தேனை கலந்து குடித்து வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
பாதாம் தாய்ப்பால் நன்கு சுரக்க வேண்டும் என்றால், பாதாமை சாப்பிட்டு வர வேண்டும். பாதாமில் அதிக அளவு ஊட்டச்சத்துகள், புரோட்டின் மற்றும் கால்சியத்தையும் நிறைந்து காணப்படுகிறது.
பூண்டு தாய்ப்பால் நன்கு சுரக்க வேண்டும் என்றால், பூண்டு சேர்த்து தயாரிக்கப்பட்ட சூப்பை குடித்து வந்தால் தாய்ப்பால் சுரக்கும்.
பால் தாய்ப்பால் நன்கு சுரக்க வேண்டும் என்றால், தினமும் 6 கப் பால் குடித்து வந்தால் அதிகளவில் தாய்ப்பால் சுரக்கும்.
பால் சுறா தாய்ப்பால் நன்கு சுரக்க வேண்டும் என்றால், பால்சுறா மீன் புட்டு செய்து சாப்பிட்டு வந்தால் பால் அதிகமைக சுரக்கும். முருங்கை கீரை தாய்ப்பால் நன்கு சுரக்க வேண்டும் என்றால், முருங்கை கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.