ஏனையவை

ஜனாதிபதி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் தொடர்பில் வெளியிட்ட அறிவிப்பு

ஊழியர் சேமலாப நிதியம் (EPF) மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF) ஆகியவற்றை புதிய சுயாதீன அமைப்பொன்றின் கீழ் கொண்டுவர அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சிகளுடன் கலந்துரையாடி அவர்களின் முன்மொழிவுகளுக்கு இடமளிக்க நாங்கள் தயாராக உள்ளோம் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

EPF மற்றும் ETF நிதிகளை வெளிநாட்டில் முதலீடு செய்ய அனுமதிக்க வேண்டுமா என்பது நாங்கள் விவாதிக்க வேண்டும். அனுமதிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். எவ்வாறாயினும் இவ்விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகளுடன் விவாதிக்க தயாராக உள்ளோம். EPF தற்போது மத்திய வங்கியால் நிர்வகிக்கப்படுகிறது அதே நேரத்தில் ETF தொழிலாளர் துறையால் கையாளப்படுகிறது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Back to top button