ஏனையவை

இனி கேரளா ஸ்டைலில் தித்திப்பான பாலடை பிரதமன் செய்யலாம்!!

கேரள மாநிலத்தின் இனிப்பு வகைகளில் ஒன்றிலான பாலடை பிரதமன் எவ்வாறு செய்வார்கள் என்று தெரியுமா? இது அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பு வகையாகும்.

மேலும் இந்த பாலாடை பிரதமனை எவ்வாறு செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையானப் பொருட்கள்
பச்சரிசி – ஒரு கப்

பால் – 1 1/2 லிட்டர்

சர்க்கரை – ஒரு கப்

தேங்காய் எண்ணெய் – 2 தே.கரண்டி

வாழையிலை – 4
கேரளா ஸ்டைல் பாலடை பிரதமன்!! | How To Cook Paladai Pradaman

செய்முறை
முதலில் பச்சரிசியை ஊறவைத்து நன்றாக கழுவி அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின் அந்த மாவில் சிறிது தண்ணீரும், தேங்காய் எண்ணெயும் கலந்து தோசை மாவு பதத்திற்கு கலந்து எடுக்க வேண்டும்.

கலந்த மாவை வாழையிலையில் ஊற்றி அதைக் கட்டி கொதிக்கும் நீரில் 30 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

வேகும் வேளையில் ஒரு பாத்திரத்தில் பாலை காய்த்து அதனுடன் சர்க்கரை சேர்த்து பால் நிறம் மாறும் வரை கிளற வேண்டும்.

அந்த சமயத்தில் வாழையிலைகளை வெளியில் எடுத்து குளிர்ந்த நீரில் போட்டு வாழையிலைகளைப் பிரிக்கவும்.

கிடைக்கும் அடைகளை நன்றாக நீரில் கழுவி பொடிபொடியாக கொத்தி வைத்து எடுக்க வேண்டும்.

கொத்திய அடைகளை சுண்டிய பாலில் சேர்த்து கிளர்ந்து 10 நிமிடங்கள் கழித்து இறக்கினால் சுவையான பாலடை பிரதமன் தயார்!!

Back to top button