உடல்நலம்

அதிக சத்துக்கள் நிறைந்த கருப்பு கொண்டைக்கடலையின் பயன்கள் ஏராளம்!

பொதுவாகவே தானியம் என்றாலே அதில் என்ன சத்துக்கள் நிறைந்திருக்கும் என்ற கேள்வி தான் நம்முள் எழும். ஒவ்வொரு தானியத்திலும் ஒவ்வொரு சத்துக்கள் நிறைந்துள்ளது. அந்தவகையில் தான் கருப்பு கொண்டைகடலை சாப்பிடுபவர்களுக்கு நிறைய சத்துக்கள் கிடைக்கின்றது. கடுகு சிறிதானாலும் காரம் பெரிது என்று கூறுவது போல் சிறிய கடலையாக இருந்தாலும் இதில் காணப்படும் சத்துக்கள் அதிகம் தான். அது பற்றி இந்த பதிவில் மேலும் விரிவாக தெரிந்துக்கொள்வோம்.

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும்.

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

நார்ச்சத்து கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துகிறது.

​எடை இழப்பு / Weight loss

தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

ரத்தசோகையையும் தடுக்கும்.

செரிமான ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.

சிறந்த குடல் ஆரோக்கியத்தை தரும்.

உடல் எடையை குறைக்க உதவும்.

கர்ப்பிணிகளுக்கு குழந்தை வளர்ச்சிக்கு உதவும்.

உடலில் ஹூமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது.

புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது.

மார்பக புற்று நோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை குறைக்கும்.

சருமத்துக்கு இயற்கையான பொலிவை கொடுக்கும்.

கருப்புக் கொண்டக்கடலை / Black chickpeas

வீட்டிலேயே இலகுவாக கருப்புக் கொண்டக்கடலை வைத்து எப்படி சூப் செய்யலாம் என்று மேலும் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்

கருப்பு கொண்டைக்கடலை – 1 கப்

வெங்காயம் (பெரியது) – 4 துண்டுகள்

சீரகம் – தேவையான அளவு

பூண்டு – 5 பற்கள்

நறுக்கிய இஞ்சி – 1 துண்டு

கருப்பு மிளகு – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

கொத்தமல்லி இலை – தேவையான அளவு

Black chickpeas soup / கருப்புக் கொண்டக்கடலை சூப்
செய்முறை

முதலில் கருப்பு கொண்டைக்கடலையை ஊறவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பிரஷர் குக்கரில் நான்கு கப் தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து 3-4 விசில் வரும் வரை வேகவைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் நெய், சீரகம் மற்றும் பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

நிறம் மாறியதும், வேகவைத்த கொண்டைக்கடலையைச் சேர்க்கவும்.

இறுதியாக உப்பு மற்றும் மிளகுதூள் மற்றும் கொத்தமல்லி இலைகள் சேர்த்து இறக்கினால் சுவையான கொண்டைக்கடலை சூப் ரெடி!

Back to top button