உடல் வலிமை பெறவும் ஆரோக்கியத்திற்கும் ஊட்டச்சத்து நிறைந்த நவதானிய அடை: செய்முறை இதோ!
பல தானியங்களை வைத்து செய்வதால் இந்த நவதானிய அடை சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாகவும், ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருக்கும். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த நவதானிய அடையை தொடர்ந்து செய்து சாப்பிட்டு வர உடலை ஆரோக்கியமான முறையில் பராமரிக்கலாம். வெறும் 1/2 மணி நேரம் போதும் இந்த நவதானிய அடையை வீட்டிலே ஈசியாக செய்யலாம்.
தேவையான பொருட்கள்
இட்லி அரிசி- 1 கப்
துவரம் பருப்பு- 1/4 கப்
கருப்பு சுண்டல்- 1/4 கப்
பச்சை பயிறு- 1/4 கப்
கடலை பருப்பு- 1/4 கப்
கொள்ளு பருப்பு- 1/4 கப்
பச்சை பட்டாணி- 1/4 கப்
வெள்ளை சுண்டல்- 1/4 கப்
கருப்பு உளுந்து- 1/2 கப்
நிலக்கடலை- 1/4 கப்
பாசி பருப்பு- 1/4 கப்
ராகி- 1/4 கப்
காராமணி சுண்டல்- 1/4 கப்
கிராம்பு- 3
இலவங்கப்பட்டை- 2
பெருஞ்சீரகம் – 1ஸ்பூன்
சிவப்பு மிளகாய்- 6
உப்பு- 1 டீஸ்பூன்
எண்ணெய்- தேவையான அளவு
வெங்காயம்- 1
பச்சைமிளகாய்- 2
கருவேப்பிலை- 1 கொத்து
செய்முறை
கொடுக்கப்பட்டுள்ள இட்லி அரிசி இட்லி அரிசி, துவரம் பருப்பு, கருப்பு சுண்டல், பச்சை பயிறு, கடலை பருப்பு, கொள்ளு பருப்பு, பச்சை பட்டாணி, வெள்ளை சுண்டல், கருப்பு உளுந்து, நிலக்கடலை, பாசி பருப்பு, ராகி, காராமணி சுண்டல் இவற்றை 2 முறை கழுவி 12 மணி நேரம் நன்கு ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
ஊறவைத்த வைத்த தானியங்களை ஒரு மிக்ஸி அல்லது கிரெண்டரில் போட்டு அதனுடன் கிராம்பு, இலவங்கப்பட்டை, சிவப்பு மிளகாய், பெருஞ்சீரகம், சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அரைத்த மாவுடன் தேவையான அளவு உப்பு மற்றும் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலை சேர்த்து கிளறவும்.
இதை அடை தோசை மாவு அளவிற்கு தண்ணீர் ஊற்றி கரைத்து தோசை போல் சுட்டு எடுத்தல் ஆரோக்கியம் நிறைந்த சுவையான நவதானிய அடை தயார்.