இலங்கை

வியஸ்காந்த்தை வாழ்த்தி முகநூலில் பதிவிட்ட கிரிக்கெட் ஜாம்பவான்

இலங்கை அணியின் கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவரான குமார் சங்கக்கார, யாழ்ப்பாண வீரர் வியஸ்காந்தை வாழ்த்தி முகநூலில் பதிவிட்டுள்ளார். இந்தியாவில் நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டித் தொடரில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியின் பணிப்பாளராக குமார் சங்கக்கார கடமையாற்றி வருகின்றார். அந்த அணியின் வலைப் பந்து வீச்சாளராக வியஸ்காந்த் கடமையாற்றியிருந்தார்.

குமார் சங்கக்காரவின் பதிவில், வியஸ்காந் எமது வலைப் பந்து வீச்சாளராக இடம்பெற்றமை பெரு மகிழ்ச்சி அளிக்கின்றது. அவர் மிகச் சிறப்பாக பந்து வீசினார், சிறந்தவர்களிடம் கற்றுக் கொண்டார். இதே புன்னகையுடன் இலங்கை தேசிய அணியின் சீருடையில் விரைவில் அவரை பார்க்க முடியும் என நம்புகின்றேன் என சுட்டிக்காட்டியுள்ளார்.

Back to top button