யாழில் பாதசாரி கடவைக்கு அருகாமையில் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

யாழில் இன்றைய தினம் (01.3.2024) பாதசாரி கடவைக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் உரும்பிராய் வடக்கு பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி அருமைநாயகம் (வயது 80) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த முதியவர் இன்று காலை வீட்டிற்கு அருகாமையில் உள்ள பகுதியில் குப்பையை கொட்டிவிட்டு வீட்டுக்கு வருவதற்காக வீதியை கடக்க முற்பட்ட போது, பலாலியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்துள்ளார்.
இந்நிலையில் அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்த வேளை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.