உள்ளங்கை, உள்ளங்கால் அதிகமாக வியர்ப்பதை தடுக்கும் சித்த மருத்துவ குறிப்புக்கள்!
உடலில் வியர்வைச் சுரப்பிகள் அதிகம் சுரப்பதனை ‘ஹைப்பர் ஹைட்ரோசிஸ்’ என்று சொல்வார்கள் . உள்ளங்கை, பாத கசிவுநோய் (Hyperhidrosis). இந்நோயை உடையவர்களுக்கு உள்ளங்கைகள், உள்ளங்கால்கள் அதிக அளவு வியர்க்கும் தன்மை கொண்டதாக இருக்கும் .
இவ்வாறு உடலின் சீரான வெப்பம் மாற்றத்திற்கு உள்ளாகிறது.
இதனால் அவர்கள் மனதளவிலும், உணர்ச்சி வசப்படுதலிலும், அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள் என்று கூறுகிறார்கள் .
இந்தப் பிரச்னை உள்ளவர்களுக்கு அன்றாட வேலைகளே பாதிக்கும் அளவுக்கு வியர்த்துக் கொட்டும். `இவர்களில், இரண்டு சதவிகிதம் பேர்தான் இது ஒரு பிரச்னை என்பதை உணர்ந்து, மருத்துவத்தை நாடுகிறார்கள்’ என்ரூ ஓர் ஆய்வு சொல்லுகிறது . இதைக் கண்டுகொள்ளாமல்விடுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
இவ்வாறான உள்ளங்கை பாத கசிவினால் பாதிக்கப்படுபவர்கள் இதற்கான காரணங்களைக் கண்டறிந்து அவற்றைத் தவிர்க்க வேண்டும். அதிகம் உணர்ச்சிவசப்படுதலையும், மன அழுத்தம் தரவல்ல சந்தர்ப்பங்களையும் இயன்றளவில் தவிர்ப்பது சிறந்தது.
இவ்வாறு இந்த நோய் இருப்பவர்களுக்கு வியர்த்துக்கொண்டேயிருக்கும். வியர்வைச் சுரப்பிகள், தோலின் மேற்பரப்பில்தான் இருக்கின்றன. உடலிலிருந்து அதிக வியர்வை வெளியாகும்போது, அவை பாதிக்கப்பட்டு அடிக்கடி சருமப் பிரச்னைகள் ஏற்படலாம் என்று சொல்லப்படுகிறது . இந்தப் பிரச்சினை இருப்பவர்கள், மற்றவர்கள் தங்களை என்ன நினைப்பார்கள், நினைக்கிறார்கள், உடலில் துர்நாற்றம் வீசுகிறதா என்றெல்லாம் யோசித்தபடியே இருப்பார்கள். இதனால், செய்யும் வேலைகளில் கவனச்சிதறல் ஏற்படும். மனஅழுத்தம், மனச்சோர்வு போன்ற உளச்சிக்கல்கள் உண்டாகும்.
இதற்கு மிக முக்கியமாக சிகரெட், மதுபானம் குடிப்பதை தவிர்த்தல் வேண்டும்.
இவ்வாறு இந்த நோயை குணமாக்கும் சில சித்த மருத்துவ குறிப்புக்களையும் சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
இந்த பிரச்சனைக்கான சித்த மருந்துகள்:
1) சங்கு புஷ்பம் மலர் 2, இஞ்சிச்சாறு சிறிதளவு, தேன் சிறிதளவு, ஒரு டம்ளர் தண்ணீர். இவைகளைக் காய்ச்சி, காலை, இரவு குடித்துவந்தால் உள்ளங்கை ,பாத கசிவு நோய் குணமாகுமாம்.
2) நன்னாரி மணப்பாகு அல்லது சர்பதை காலை, மாலை 10 மி.லி ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து குடிக்கலாம் என்று சொல்லப்படுகிறது .
3) சிறுநாகப்பூ 1 அல்லது 2 எடுத்து அதை வறுத்து, பொடித்து தேன் அல்லது சர்க்கரையுடன் இரண்டு வேளைகள் எடுத்து வந்தால், உள்ளங்கால், உள்ளங்கைகளில் வருகின்ற அதிகவியர்வை குணமாகிறதாம் .
ஹைப்பர் தைராய்டு, ரத்த சர்க்கரை அளவு குறைதல், இதய நோய்களில் வரும் அதி வியர்வையைத் தடுக்க அந்தந்த நோய்க்குரிய மருந்துகள் எடுத்தால் போதுமானது என்று சித்த மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
குறிப்பு – சித்த மருத்துவர்களின் ஆலோசைனையோடு இதனை பின்பற்றவும்.