உடல்நலம்

வெறும் 15 நிமிடங்களில் புரோட்டீன் சத்தை அள்ளித்தரும் வேர்க்கடலை சப்ஜி

மிக எளிதாகவும், அதேசமயம் விலை குறைவாகவும் கிடைக்கக்கூடிய வேர்க்கடலையில் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளன.

சிலர் வறுத்தோ, வேகவைத்தோ, மிட்டாய் வடிவிலோ எடுத்துக்கொள்வார்கள், புரோட்டீன் சத்துக்களை வாரி வழங்கும் வேர்க்கடலையில் சப்ஜி செய்வது எப்படி என தெரிந்து கொள்வோம்.

இதை மதிய உணவு அல்லது இரவு உணவாக பூரி, பரோட்டா, சப்பாத்தி, இட்லி, தோசை, ஆப்பம், இடியாப்பத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.

ஆகவே வெறும் 10 முதல் 15 நிமிடங்களில் இந்த சப்ஜியை வீட்டிலேயே செய்ய என்ன பொருட்கள் வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.

தேவையான பொருட்கள்
பச்சை நிலக்கடலை – 200 கிராம்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
சோம்புத் தூள் – 1/2 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
தேங்காய் – அரை முடியில் பாதி
ஏலக்காய் – தலா 1
கிராம்பு – தலா 2
பட்டை – தலா 1
முந்திரி – 6
புதினா – தேவையான அளவு
ஆயில் – 1 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை
முதலில் நிலக்கடலையை வறுத்தெடுத்து, தோல் நீக்கி 2 மணிநேரமாவது தண்ணீர் சேர்த்து ஊற வைக்க வேண்டும்.

முந்திரி மற்றும் தேங்காயை அரைத்து வைக்கவும்.

ஒரு குக்கரில் ண்ணெய் ஊற்றி பட்டை, ஏலக்காய், கிராம்பு போட்டு தாளித்த பிறகு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி எடுக்க வேண்டும்.

வெங்காயம் வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது, சோம்புத் தூள், தக்காளி, கரம் மசாலா தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள், புதினா, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து மீண்டும் வதக்க வேண்டும்.

அடுத்ததாக வடிக்கட்டிய நிலக்கடலையை 2 கப் நீர் விட்டு 3 விசில்கள் வரும் வரை வதக்கிய பொருள்களுடன் வேக வைக்கவும்.

பின்னர் 3விசில்கள் வந்ததும், அரைத்த தேங்காய் முந்திரி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து இறக்கினால் சுவையான நிலக்கடலை சப்ஜி தயார்!

Back to top button