இலங்கை
அமைச்சரின் விலை குறைப்பு குறித்து வெளியான அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி !
நாட்டில் எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் ஒரு கிலோ நெத்தலியின் விலை 200 முதல் 250 ரூபாவுக்குள் குறைக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
இதேவேளை, 1250 ரூபா வரையில் தற்போது விற்பனை செய்யப்படும் கோழி இறைச்சியின் விலையை டிசம்பர் மாதமளவில் 850 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும் என எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த காலங்களில் கோழி இறைச்சி, முட்டை, கருவாடு மற்றும் மீனின் விலைகள் அதிகரித்திருந்தமையால், நாட்டில் போஷாக்கு தொடர்பான பிரச்சினை ஏற்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.