இலங்கை
யாழில் மீண்டும் எரிபொருள் வரிசையில் மக்கள்!
இலங்கையில் மக்கள் மீண்டும் பெற்றோலிற்காக வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கமைய, புதன்கிழமை (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை திருத்தம் செய்யப்பட்டு புதிய விலைகள் அறிவிக்கப்பட்ட போதிலும் யாழ் மாவட்டத்தில் பல பகுதிகளில் பெற்றோல் தட்டுப்பாடு நிலவுவதுடன், மக்கள் மீண்டும் வரிசையில் காத்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. மேலும் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு என்ற தகவல் பரவ ஆரம்பித்துள்ள நிலையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் முண்டியடிக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை முதல் மக்கள் யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசைகளில் பெற்றோலை பெற்று கொள்வதற்காக காத்திருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது.