இலங்கை

வட்டிக்கு பணம் வாங்கி மின் கட்டணம் செலுத்தும் கொழும்பு மக்கள்

உணவை குறைத்து மின் கட்டணம் செலுத்தும் நிலைமைக்கு தாம் வந்துள்ளதாக கொழும்பிலுள்ள மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். பதினையாயிரத்திற்கும் மேலாக தமக்கு மின் கட்டணம் வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். வட்டிக்கு பணம் பெற்று மின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக தமது கவலையை தெரிவித்துள்ளனர். ஒரு இலட்சம் ரூபா கூட தற்போதைய காலத்தில் போதவில்லை. வீட்டு வாடகை, நீர் கட்டணம், மின் கட்டணம், உணவு, பிள்ளைகளின் படிப்பு என எதனையுமே சமாளிக்க முடியவில்லை என கூறியுள்ளனர்.

Back to top button