ஆன்மிகம்

புதாத்ய ராஜயோகத்தால் அமோக பலன் பெறவுள்ள இராசிக்காரர்கள்!

ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் இயக்கங்கள் நமது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சில சமயங்களின் கிரகங்கள் மற்ற கிரகங்களுடன் இணைந்து பயணிக்கும்.

அப்படி ஒன்றிணையும் போது சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும்.

அந்த யோகங்களும் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியனும், கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதனும் ஒன்றிணையும் போது உருவாகும் யோகம் தான் புதாதித்ய ராஜயோகம்.

இந்த ராஜயோகம் மகர ராசியில் சுமார் 1 வருடத்திற்கு பின் உருவாகிறது.

ஏற்கனவே சூரியன் ஜனவரி 14 ஆம் தேதி மகர ராசிக்குள் நுழைந்தார்.

இந்நிலையில் எதிர்வரும் (01.02.2024) ஆம் தேதி புதனும் மகர ராசியில் நுழையவுள்ளார்.

இப்படி புதன் நுழைவதால் எதிர்வரும் (01.02.2024) புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.

இப்படி உருவாகும் ராஜயோகத்தால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் நல்ல நிதி நன்மைகளையும், அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றிகளையும் பெறவுள்ளார்கள்.

மகரம்
மகர ராசியின் முதல் வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.

இதனால் இந்த ராசிக்காரர்களின் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும்.

பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவைப் பெறுவார்கள்.

சிலர் இக்காலத்தில் நல்ல செய்திகளைப் பெறக்கூடும்.

திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் இனிமையான நேரத்தை செலவிடுவார்கள்.

இக்காலத்தில் உங்கள் வாதுக்கைத் துணையும் முன்னேறலாம். திருமணமாகாதவர்கள் நல்ல வரனைப் பெற வாய்ப்புள்ளது.

தனுசு
தனுசு ராசியின் 2 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.

இதனால் இந்த ராசிக்காரர்கள் திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள்.

நீண்ட நாட்களாக வேலைத் தேடிக் கொண்டிருந்தால், ஒரு புதிய வேலை இக்காலத்தில் கிடைக்கும்.

வேலை மற்றும் வணிகத்தில் சாதகமான முடிவுகளைப் பெறக்கூடும்.

திட்டமிட்ட வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பேச்சால் பல காரியங்களை சாதிப்பீர்க்ள்.

உங்கள் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்.

மேஷம்
மேஷ ராசியின் 10 ஆவது வீட்டில் புதாத்திய ராஜயோகம் உருவாகவுள்ளது.

இதனால் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல சாதகமான பலன்களைப் பெறக்கூடும்.

வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள்.

நிதி நிலை வலுவடையும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வேலையில் வெற்றி காண்பீர்கள்.

நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலை வெற்றிகரமாக முடிவடையும். புதிய வேலையைத் தொடங்க நினைத்தால், இக்காலத்தில் அதை செய்தால் நல்ல வளர்ச்சியைக் காணலாம்.

Back to top button