ஆன்மிகம்

2024 இல் இராகுவின் அருளால் தொழில் முன்னேற்றம் காணவுள்ள இராசிக்காரர்கள்

நவக்கிரகங்களில் நிழல் கிரகமான இராகு ஒரு இராசியில் இருந்து மற்றொரு இராசிக்கு செல்ல 18 மாதங்கள் ஆகும். முக்கியமாக ராகு மற்ற கிரகங்களைப் போல் நேர்பாதையில் பயணிக்காமல், பின்னோக்கி வக்ர நிலையில் தான் பயணிப்பார். இப்படிப்பட்ட ராகு 2023 ஆம் ஆண்டில் மீன ராசிக்கு இடம் மாறினார். இந்த மீன இராசியில் தான் 2024 ஆம் ஆண்டு முழுவதும் பயணிக்கவுள்ளார்.

கிரகங்களில் இராகு ராசியை மாற்ற நீண்ட காலம் எடுப்பதால், இராகுவின் நிலையில் ஏற்படும் மாற்றங்களானது, ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். மீன இராசியில் இராகு பயணிப்பதால், அதன் தாக்கம் அனைத்து இராசிகளிலுமே காணப்பட்டாலும், 2024 ஆம் ஆண்டில் திடீர் நிதி நன்மைகளையும், தொழிலில் நல்ல முன்னேற்றத்தையும் பெறவுள்ள மூன்று இராசிக்காரர்கள் இவர்கள்தான்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டில் இராகு நல்ல பலன்களை அளிப்பார். அதுவும் கும்ப ராசியின் அதிபதியான சனியும், இராகுவும் நண்பர்கள் என்பதால், ராகு இந்த இராசிக்காரர்களுக்கு நல்ல நிதி நன்மைகளை அளிப்பார்.

பேச்சின் தாக்கம் அதிகரிக்கும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு இராகுவின் அருளால் நல்ல வெற்றி கிடைக்கும்.

அரசு வேலைக்கு முயற்சித்தால், அந்த வேலை கிடைக்கும்.

முக்கியமாக நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

துலாம்
துலாம் இராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டானது இராகுவின் அருளால், நீண்ட காலமாக இழுத்துக் கொண்டிருந்த நீதிமன்ற வழக்குகள் முடிவுக்கு வரும்.

எதிரிகளை இந்த ஆண்டில் வெற்றி பெறுவீர்கள். தொழிலதிபராக இருந்தால், இந்த ஆண்டில் நல்ல இலாபத்தைப் பெறக்கூடும்.

மேலும் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். புதிய வேலையைத் தொடங்க நினைத்தால், அதற்கு 2024 ஆம் ஆண்டு நல்ல பலன்களைத் தரும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டானது இராகுவின் அருளால் சாதகமாக இருக்கும்.

அதுவும் இராகு வருமானம் மற்றும் இலாபத்தைத் தரும வீட்டில் இருப்பதால், இந்த இராசிக்காரர்களின் வருமானத்தில் எதிர்பாராத அளவில் உயர்வு ஏற்படும்.

புதிய வருமான ஆதாரங்களில் இருந்து நிறைய பணத்தை சம்பாதிப்பீர்கள்.

வேலையை மாற்ற நினைத்தால், இந்த ஆண்டில் நல்ல வேலை தேடி வரும்.

முதலீடுகளில் இருந்து நல்ல இலாபம் கிடைக்கும். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் இருந்து நிறைய பணத்தை சம்பாதித்து வெற்றி பெறுவீர்கள்.

Back to top button