உடல்நலம்

மழைகாலத்தில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மிளகு குழம்பு… 10 நிமிடத்தில் செய்யலாம்

பொதுவாகவே குளிர்காலம் வந்துவிட்டால் குழந்தைகளும் சரி பெயரியவர்களும் சரி அடிக்கடி நோய்வாய்பட ஆரம்பித்து விடுவார்கள். குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடிய உணவுகளை தெரிவு செய்து சாப்பிட வேண்டியது அவசியமாகும். குளிர்காலத்தில் எப்போதுமே சூடான அல்லது காரசார உணவுகளைச் சாப்பிட நாம் விரும்புவோம். இந்த வகையில் சுவையாகவும் அதே நேரத்தில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை ஆராக்கியமாக வைக்கும் மிளகு குழம்பு இலகுவாக எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
மிளகு கொத்தமல்லி தேவையான அளவு

கடுகு வெந்தியம்

40 கிராம் புளி

50 கிராம் பூண்டு

ஒரு கரண்டி மஞ்சள் தூள்

கறிவேப்பிலை தேவையான அளவு

உப்பு தேவையான அளவு

மிளகு கொத்தமல்லி

துவரம் பருப்பு இரண்டு ஸ்பூன்

4-5 காய்ந்த மிளகாய்

நல்லெண்ணெய் நான்மு கரண்டி

செய்முறை

ஒரு கடாயில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் மூன்று ஸ்பூன் மிளகு, கொத்தமல்லி, இரண்டு ஸ்பூன் துவரம் பருப்பு, கிராம்பு, 4-5 காய்ந்த மிளகாய் சேர்த்து நன்கு வறுத்துக்கொள்ள வேண்டும்.

அதன் பிறகு ஒரு பேனில் கறிவேப்பிலை இலைகள் போட்டு வதக்கவும். இவை அனைத்தும் நன்கு ஆறிய பிறகு மிக்ஸியில் போட்டு அரைத்துப் பொடியாக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

மிளகு குழம்பு செய்வதற்கு புளி தண்ணீரை தயாரித்து கொள்ளவும். இப்போது ஒரு பெரிய கடாயில் நான்கு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடுபடுத்துங்கள். அதில் கடுகு மற்றும் சிறிதளவு வெந்தயம் சேர்க்கவும்.அதோடு காய்ந்த மிளகாய், உரித்த பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.

இப்போது புளி தண்ணீர், தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், அரைத்து வைத்திருக்கும் பொடியையும் சேர்க்கவும். குமிழிகள் தோன்றும் வரை நன்கு கொதிக்க விடவும். தீயின் வேகத்தைக் குறைத்து மிளகு குழம்பு கெட்டியாகும் வரை கொதிக்கவிட வேண்டும்.

குழம்பிலிருந்து எண்ணெய் பிரியும்வரை கொதிக்க வைத்து இறக்கினால் சூப்பரான சுவையில் ஆரோக்கியம் நிறைந்த மிளகு குழம்பு தயார்.

Back to top button