இலங்கை

மின்சார கட்டணத்தை 50% ஆல் குறைக்க திட்டம்

இலங்கையில் கடந்த ஒக்டோபர் மாதம் 18 வீதத்தினால் அதிகரிக்கப்பட்ட சுமார் 50% மின்சாரக் கட்டணமானது கூடிய விரைவில் குறைக்கப்படும் என மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நந்திக பத்திரகே தெரிவித்துள்ளார். நேற்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களாக தொடர் மழை பெய்து வருவதால் நீர் மின் உற்பத்தியின் இலாபத்தை மக்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற தீர்மானத்தில் இலங்கை மின்சார சபை இருப்பதாக சுட்டிகாட்டியுள்ளார். மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான யோசனை எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்ததுள்ளார்.

Back to top button