பிரித்தானியாவிலிருந்து சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த தயார் நிலையில் விமானம்!
பிரித்தானியாவிலிருந்து சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த விமானம் தயாராக உள்ளதாகவும், விரைவில் அது தன் வேலையைச் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு நாடுகடத்த பிரித்தானிய உள்துறை அலுவலகம் இரகசியமாக தயாராகி வருவதாகவும், செப்டம்பர் மாதத்தில் சட்டவிரோத புலம்பெயர்ந்தோருடன் ருவாண்டாவுக்கு புறப்பட விமானம் தயாராக உள்ளதாகவும் பிரித்தானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ஏற்கனவே ஒரு முறை சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்த பிரித்தானியா முயன்றபோது, ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம் தலையிட்டதால் நாடுகடத்துவது தள்ளிப்போனது. ஆனால், இந்த ஆண்டு உயர்நீதிமன்ற வழக்கு ஒன்றில் சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை பிரித்தானியாவிலிருந்து ருவாண்டாவுக்கு நாடுகடத்துவது சட்டப்படிதான் நடக்கிறது என தீர்ப்பு கிடைத்துள்ளது.
இதனை எதிர்த்து செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கில் அரசுக்கு வெற்றி கிடைக்குமானால், அதேபோல வழக்கில் உச்சநீதிமன்றம் தலையிடாமல் இருக்குமானால், சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தும் அரசின் திட்டம் நிறைவேறிவிடும் என பிரித்தானிய அமைச்சர்கள் நம்புகிறார்கள்.