இலங்கைஉடல்நலம்

இலங்கையில் நோய்க்கிருமிகளாக மாறியுள்ள உணவு! பொதுமக்கள் அவதானம்

இலங்கையில் உள்ளூர் சந்தையில் இருந்து கொள்வனவு செய்யப்படும் உணவுப் பொருட்களில் பெரும்பாலானவை விஷம் மற்றும் இரசாயனங்களால் நோய்க்கிருமிகளாக மாறிவிட்டதாக வைத்தியர்கள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். இதன் விளைவாக, இலங்கை உலகில் விஷ உணவுகளை உட்கொள்ளும் நாடுகளில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.

பலாப்பழத்தைப் பாதுகாக்கவும், மாம்பழங்களைப் பழுக்க வைக்கவும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் பயன்படுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது. இந்த இரசாயனங்கள் உணவில் கலந்தால், அவை உடலில் பல்வேறு நோய்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது என தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் பெரும்பாலான கடைகளில் கோழி பிரியாணி மற்றும் பிரைட் ரைஸ் ஆகியவற்றை மஞ்சள் நிறமாக மாற்ற அதிக அளவு மஞ்சள் சாயம் பயன்படுத்தப்படுகிறது. இது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்று இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.

Back to top button