இலங்கை

தமிழர் பகுதியில் கடலில் மூழ்கிய 4 மாணவர்களை போராடி உயிருடன் மீட்ட பொலிஸார்

கடலில் மூழ்கிக் கொண்டிருந்த நான்கு பாடசாலை மாணவர்கள் மற்றும் ஒரு இளைஞரை பொலிஸ் உயிர்காப்பு பிரிவு அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று (12.2.2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த குழுவினர் பாணந்துறை கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த போது கடலலையில் சிக்கி நீரில் மூழ்கினர்.

இதன்போது பாணந்துறை கடற்கரையில் உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபிள் புஷ்பகுமார மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் தசுன் ஆகியோர் மாணவர் குழுவைக் காப்பாற்றி உள்ளனர். குறித்த தகவலை பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மீட்கப்பட்டவர்களில் 12 மற்றும் 09 வயதுடைய இரண்டு சிறுவர்களும், 17 மற்றும் 14 வயதுடைய இரண்டு சிறுமிகளும், 23 வயதுடைய இளைஞரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Back to top button