இலங்கை

இன்று நள்ளிரவு முதல் விலை மாற்றம் ; லிட்ரோ எரிவாயு புதிய விலை இதோ!

நாட்டில் இன்று சனிக்கிழமை நள்ளிரவு (04) முதல் லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய விலைகள் 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 95 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 3,565 ரூபாவாக காணப்படுகின்றது.

இந்நிலையில் 05 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 38 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 1,431 ரூபாவாக காணப்படுகின்றது. 2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 18 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 668 ரூபாவாக காணப்படுகின்றது.

Back to top button