எரிவாயு விலை தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு
அனைத்து மாவட்டங்களிலும் குறைக்கப்பட்ட எரிவாயு சிலிண்டர்களின் விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய பொதுமக்கள் எரிவாயு சிலிண்டர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட மேலதிகமாக பணத்தினை கொடுக்க வேண்டாம் என நுகர்வோர் அதிகார சபை அறிவித்துள்ளது. இதேவேளை தமது மாவட்டத்தில் என்ன விலையில் எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றது என்பதைப் அறிய விலைப்பட்டியலை பார்வையிடுமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனம் என்பன தமது விலைச்சூத்திரத்திற்கு ஏற்ப விலை குறைப்பு மேற்கொண்டுள்ள நிலையிலே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சந்தை எரிவாயு விலை மற்றும் ரூபாவின் ஸ்திரத்தன்மையைக் கருத்தில் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்ச விலைச் சலுகைகளை வழங்க தமது நிறுவனம் எதிர்பார்த்துள்ளது என லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் மாவட்டங்களுக்கு ஏற்ப விலை மாற்றங்கள் பற்றிய கூடுதல் விபரங்களை அறிய லாஃப் எரிவாயு வாடிக்கையாளர் சேவை எண் 1345 ஐ அழைத்து பொதுமக்கள் தெளிவினை பெற முடியும் என குறிப்பிட்டுள்ளது.