இலங்கை
இன்று முதல் நடைமுறைக்கு வரும் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான விலை குறைப்பு!

3 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லங்கா சதொச நிறுவனம் ஊடாக இந்த விலைக்குறைப்பு நடைமுறைக்கு வருகிறது.
இதன்படி, ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டு, 195 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது. ஒரு கிலோ கிராம் சிவப்பு பருப்பின் விலை, 4 ரூபாவால் குறைக்கப்பட்டு, 295 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோ கிராம் கடலை பருப்பின் விலை 13 ரூபாவால் குறைக்கப்பட்டு, 275 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த விலைக்குறைப்பானது இன்று (15.06.2023) முதல் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
