இலங்கை

கொழும்பில் தனியார் பேரூந்து விபத்து: பயணிகள் சிலர் காயம்

கொழும்பு – ஜயவர்தனபுர மருத்துவமனைக்கு அருகில் இடம்பெற்ற தனியார் பேருந்து விபத்தில் பயணிகள் சிலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து சம்பவமானது இன்று (30.01.2024) மாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது மத்துகமவில் இருந்து சிறீ ஜயவர்தனபுர நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பேருந்து சாலையை விட்டு விலகிச் சென்றதால் விபத்து ஏற்பட்டதாக சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் பேரூந்து திடீரென சீமெந்து தடுப்பொன்றில் மோதிய போது ஏற்பட்ட அதிர்வில் பேருந்தில் பயணித்த சிலர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து காயமடைந்தவர்கள் உடனடியாக ஜயவர்தனபுர மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர். மேலும் இவ்விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தந்து ஆரம்பித்துள்ளனர்.

Back to top button