இலங்கை
இலங்கையில் அதிகரிக்கப்படவுள்ள தனியார் பல்கலைக்கழகங்கள்!

இலங்கையில் மேலும் 9 தனியார் பல்கலைக்கழகங்களை நிர்மாணிப்பதற்கான விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள பல்வேறு பிரச்சினைகள் காரணமாக இரண்டு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.
இருந்த போதிலும், குறித்த பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.