இலங்கை
பல்வேறுபட்ட பொருட்களுக்கான இறக்குமதிக் கட்டுப்பாடுகள் நீக்கம் தொடர்பில் வர்த்தமானி வெளியீடு!
இலங்கையில் பல பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு நாயகம் வர்த்தமானி அறிவித்தலில் அறிவித்துள்ளார். இலத்திரனியல் பொருட்கள், சுகாதார உபகரணங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் 09.06.2023 திகதியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.